உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!
Sep 13, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாடகர் ஜூபின் கர்க்கின் மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த குரல், மவுனமாகியதை நினைத்து ரசிகர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். மெல்லிய குரலால் ரசிகர்களை  கட்டிப்போட்ட ஜூபின் கர்க் குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரான ஜூபின் கர்க், எப்பேர்பட்ட கல் நெஞ்சுகாரர்களையும் நொடிப்பொழுதில் இளகச் செய்யும் காந்த குரலுக்குச் சொந்தக்காரர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் 38 ஆயிரத்துக்கும் பாடல்களைப் பாடி, இசை உலகில் தனக்கெனத் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்தவர்.

இதுமட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் உரிய கவனம் பெறாத காலத்திலேயே, அதன் கலாச்சாரத்தையும் பெருமையையும் தனது புகழ் வெளிச்சம் மூலம் உலகளவில் கொண்டு சேர்த்தவர்.

ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருந்த ஜூபின் கர்க்கிற்கு, 2006-ம் ஆண்டில் வெளியான கேங்ஸ்டர்த் திரைப்படம், அவரது இசைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது . படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதும், பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தன.

குறிப்பாக, ஜூபின் கர்ப் பாடிய ‘யா அலி’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை. படம் தோல்வியடைந்துவிடும் என விமர்சர்கள் கூறியபோதும், ‘யா அலி’ பாடல் அதனைத் தவிடுபொடியாக்கியது. ஜூபின் கர்க் குரலால் கேங்ஸ்ட்ர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கரைசேர்ந்து விட, அதன்பிறகு ஜூபின் கர்க்கிற்கு எல்லா மொழிகளிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஜூபின் கர்க்கைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ரசிகர்கள் கருதி வர, அவர் ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தது ஒவ்வொருவரின் இதயத்திலும் பேரிடியாக விழுந்தது.
சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்த ஜூபின் கர்க், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், ஜூபின் கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இசை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அசாம் மக்களும் மனமுடைந்தனர்.

ஜூபின் கர்க்கின் உடலை சிங்கப்பூரில் இருந்து தாயகம் கொண்டு வருவதற்கு முன்னரே கௌகாத்தியில் உள்ள இல்லத்தில் குவியத் தொடங்கிய ரசிகர்கள், சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஜூபின் கர்க் இல்லத்திற்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டபோது, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த மக்கள், மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

ஜூபின் கர்க்கிற்கு மிகவும் விருப்பமான ஜீப்பில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, அதனை பின்தொடர்ந்த ரசிகர்கள், நா தழுதழுக்க பாடல்களைப் பாடினர். ஜூபின் கர்க் எவ்வளவு மனங்களைச் சம்பாதித்துள்ளார் என்பது ஒவ்வொருவரின் கண்களிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.

தாங்கள் நேசித்த ஒருவர் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டாரே என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் துடிதுடித்தனர். இதனிடையே ,ஸ்கூபா டைவிங் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அசாம் போலீஸார், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஷியாம் கனு மஹந்தா, ஜுபின் கர்க்கின் மேலாளர்ச் சித்தார்த்த சர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜூபின் கர்க் மறைவை ஒட்டி அசாம் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கவுகாத்தியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஜூபின் கர்க் தனது 52 வயதிலேயே உலகைவிட்டு மறைந்து விட்டாலும், அவரது பாடல்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Tags: அசாம்The magnetic voice that left the world: Fans in tears over the death of Zubin Gargஜூபின் கர்க்அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரான ஜூபின் கர்க்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

Next Post

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies