விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போது நிறுத்தும் திமுக அரசு? - அண்ணாமலை கேள்வி!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போது நிறுத்தும் திமுக அரசு? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்  ஸ்டாலின்.

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது.

எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் திரு. சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம்.

இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 – 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு. கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர்  சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்? திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: When will this DMK government stop continuously deceiving farmers? - Annamalai Questionbjpk annamalaiMK Stalindmk govt
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

வெற்றுப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் நாணிக் குறுக வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies