சொந்த மக்களை கொல்ல ரசாயன ஆயுதங்கள் - பாகிஸ்தான் மீது பகீர் புகார்!
Sep 12, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சொந்த மக்களை கொல்ல ரசாயன ஆயுதங்கள் – பாகிஸ்தான் மீது பகீர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 09:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகிறது என்று பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ரசாயன வெடிமருந்துகளால் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் மீது சர்வதேச இரசாயன ஆயுதத் தடைக்கான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் 44 சதவீத பரப்பளவை கொண்டுள்ள தென் மேற்கு மாகாணமான பலூச்சிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி பலுச் விடுதலைப் இராணுவத்தினர் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, பலூச் மக்களுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தினால் பலூச்சிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம் மீது பலூச்சிஸ்தான் விடுதலை ராணுவம் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் பலூச்சிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய பலூச் விடுதலை இராணுவம், அங்குள்ள அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தானின் தேசிய கொடியைக் ஏற்றினர். பலூச் தேசியவாதத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான மிர் யார் பலூச் தலைமையிலான “பலூசிஸ்தான் குடியரசு” தனி நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்றும் குறிப்பிட்ட மிர் யார் பலோச், பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும் என்றும், ஐநாவும் தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பலூச் ராணுவத்தினர் மீதும் பலூச் மக்கள் மீதும் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரையில் பின்னடைவுகளைச் சந்தித்த பாகிஸ்தான் ராணுவம், பலூச் மக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கலாட், குஜ்தார், போலன், கோஹ்லு, கஹான், சாகை, பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய பகுதிகளில் பலூச் மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆபத்தான ரசாயன வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் தனது எகஸ் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்திய பகுதிகளில் கிடந்த குப்பைகளில் “ரசாயனத் துகள்கள்” காணப்பட்டதாகக் கூறியுள்ள மிர் யார் பலூச், 1997 முதல் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ள இரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்த மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகப் பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன மற்றும் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகப் பலூச் ஆயுத குழுவினர் கண்டித்துள்ளனர்.

இத்தகைய ஆபத்தான ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது, போர்க்குற்றமாகும் என்பதால் தடைசெய்யப்பட்ட ரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதற்காகச் சர்வதேச நீதிமன்றங்களில் பாகிஸ்தான் மீது வழக்குத் தொடர முடியும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே, 2005 ஆம் ஆண்டில், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, பலுசிஸ்தானின் பல பகுதிகளில் அதிக அளவில் பாஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட இரசாயன வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது.

இந்த விதி மீறல்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான இந்த அலட்சியமே மனித உரிமை மீறல்களுக்கும், பலூச் மக்களின் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கும் வழிவகுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: pakistanChemical weapons to kill own people - Faqeer complains against Pakistanபாகிஸ்தான் மீது பகீர் புகார்
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம் : கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

Next Post

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies