விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் - சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Manikandan by Manikandan
Mar 6, 2026, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாயமான Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விபத்துக்கு காரணம் என்ன?

ரஷ்யாவின் சுகோய், இரட்டை இருக்கைகள் கொண்ட பல்திறன் கொண்ட போர் விமானம் ஆகும். நீண்ட தூர தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போர் விமானங்கள் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளை எடுத்துச் சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட Su-30MKI போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் முதுகெலும்பாக உள்ளது.

முதன்முதலில் 1997-ல் முதன்முதலாக ரஷ்யா இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை வழங்கியது. தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த சுகோய் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சூப்பர் சோனிக் ரக தொழில்நுட்பத்தில் இயங்கும் சுகோய் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதே இந்த சுகோய் போர் விமானத்தின் சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து கிளம்பி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஜோர்ஹட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது. சுகோய்-30 போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.

இந்நிலையில் கர்பி அங்லோங்கில் உள்ள மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டது.

ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் இந்த சுகோய் போர் விமானம் விபத்துகுள்ளானதாகவும் விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம், சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லை பகுதியில்தான் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

இந்த வடகிழக்கு எல்லையருகே சீனாவின் விமானப்படை தளமும் உள்ளதால், சுகோய் போர் விமான விபத்துக்குச் சீனாவின் தந்திரம் காரணமா? என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சீனாவின் விமானப்படை தளத்தில் இருந்து வந்த ரேடார் சிக்னல்கள், சுகோய் – 30 போர் விமானத்தை தவறாக வழிநடத்தியதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: missing Su-30MKI fighter jetIndian Air Forceboardtwo pilotsconfirmedCrashed Su-30MKI aircraft
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!

Next Post

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies