அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா - காரணம் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் வானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் சீறிப் பாய்ந்து உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற நோக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா ஏன் அமெரிக்கப் போர் விமானங்களை வாங்குவதில்லை என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிக பெரிய அளவில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுடன் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரான்சிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் என பாதுகாப்பு கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளபோதிலும், அமெரிக்காவிடமிருந்து எந்த போர் விமானத்தையும் வாங்க முன் வரவில்லை.

இரண்டாவது முறை அதிபரான பிறகு அதிபர் ட்ரம்ப், உலக அளவில் பிரபலமான F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்காவின் F-35, F-16 போன்ற போர் விமானங்கள் மீது இந்தியா ஆர்வம் காட்டவே இல்லை.

அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கும். இந்தியா ஏன் அமெரிக்காவின் போர் விமானங்களை மட்டும் வாங்க மறுப்பதற்கு வரலாற்று ரீதியாகவே நிறைய காரணங்கள் உள்ளன.

பனிப்போரின் போது ​​F-86, F-104 ஸ்டார்ஃபைட்டர், F-86D, A-37, F-16 என முக்கியமான போர் விமானங்கள் உட்பட பல ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது. அவற்றையெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போர்களில் பயன்படுத்தியுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் மிக் ரக போர் விமானங்கள் மற்றும் சுகோய்-30MKI விமானங்கள், பிரிட்டனின் ஜாகுவார் விமானங்கள், பிரான்சின் மிராஜ் ரக விமானங்கள் என இந்தியா அமெரிக்காவை நம்பாமல் தனக்கான அடையாளத்துடன் கூடிய விமானப் படையை உருவாக்கியது.

1998-ல் இந்தியாவின் அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து அப்போதைய அதிபர் பில் கிளிண்டன், இந்தியா மீது பொருளாதார தடை விதித்தார். அதனால், அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்தன.

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் நாடுகள் அந்த போர் விமானங்களின் பராமரிப்பு உதிரி பாகங்கள் போன்ற தேவைகளுக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கும் நிலை ஏற்படுகிறது.

F-16 போர்விமானத்தை வாங்கிய துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் உதிரி பாகங்களை அமெரிக்கா மறுத்த வரலாறு இருக்கிறது.

2019ஆம் ஆண்டு நடந்த பிப்ரவரியில் பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய F-16 விமானத்தை சோவியத் கால மிக்-21 பைசனை வைத்தே இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இது இனி எப்போதாவது அமெரிக்க போர் விமானங்களை இந்தியா வாங்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதை உலகறிய எடுத்துக்காட்டியது.

அதன் பிறகும் ஈகிள் II போர் விமானத்தின் மேம்பட்ட பதிப்பான F-15 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது.

ஒரு போர் விமானம் என்பது வெறும் ஆயுதமல்ல. அது நாட்டின் வான்வெளியை சொந்த விதிமுறைகளின்படி பாதுகாக்கும் திறன் கொண்ட இறையாண்மை யாகும்.

நாட்டின் இறையாண்மை கொண்ட வான்வெளியின் சாவியை தன்னிடமே வைத்து கொள்வது தான் சிறந்தது. இது ஆரம்பத்திலேயே சுதந்திர இந்தியா கற்றுக்கொண்ட பாடமாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான நவீன இந்தியா அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டிருந்த போதும் இந்திய வான்வெளிக்கான இறையாண்மையை கைவிடவில்லை.

வாசிக்க நேரமில்லையென்றால் இந்த ஆடியோவே கேளுங்கள்::

https://tamiljanam.com/wp-content/uploads/2026/03/simran.mp3

Tags: IndianAmericandefense sectorUS ArmyIranianIranian skiesPM ModiIsraeli planes fly overIndiapieceflightskiesbjp indiatn bjp
Share
Tweet
SendShare
Previous Post

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Next Post

ஈரான் போர் எதிரொலி – கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies