மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா - சிறப்பு கட்டுரை!
Sep 2, 2026, 12:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

Manikandan by Manikandan
Apr 15, 2026, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….

ஆண்டுதோறும் மகாராஷ்ட்ரா மாநிலம் பெருமழையை சந்திப்பது வாடிக்கை. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவார்கள். பேருந்து, ரயில், விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்கான முன்மொழிவை முன்னெடுத்திருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மாநில அளவில் அவசரகால செயல்பாட்டு மையம் தொடக்கம், மாவட்டங்களில் உள்ள EMERGENCY OPERATION CENTER-களை நவீனப்படுத்துதல், பேரிடர் மேலாண்மையை கற்றுக்கொடுக்க தனி கல்வி நிறுவனத்தை தொடங்குதல் என மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகள் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பேரிடர் மேலாண்மைக்கு வழிகோலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்கிறார்கள் வல்லுநர்கள்.

DISASTER MANAGEMENT-க்கென தனி இணையதளமும் ‘AAPATTI SAHAYAK’ என்னும் மொபைல் செயலியும் தொடங்கப்பட்டுள்ளன. அவசரகால செயல்பாட்டு மையம் நவீனப்படுத்தப்படுவதை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்பாட்டின் தொடக்கம் இது. விதிகளுக்கு உட்பட்டு உலகத் தரத்துக்கு இணையாக அவசரகால செயல்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்கும் கடத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் STATE EMERGENCY OPERATION CENTER-ல் உள்ளன.

அதிக செயல்திறன் கொண்ட கணினிகள், காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி, ஏராளமான தகவல்களை சேமித்து வைக்கும் SERVER-கள், SATELLITE PHONE, WIRELESS கருவிகள், செயற்கைக்கோள் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் புவியைக் கண்காணிக்கும் வசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் பாதிப்புகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும்.

பேரிடர் காலத்தின் போது மக்களுக்கும் அரசு நிர்வாகத்தும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுவதற்காக ‘AAPATTI SAHAYAK’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உதவி தேவைப்படும் மக்கள், SOS வசதியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முடியும். மேலும் புகைப்படம், வீடியோ மற்றும் LOCATION-ஐயும் அனுப்பலாம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.

Tags: Disaster Management IndiaMonsoon Preparedness IndiaMumbai FloodsDigital Governance MaharashtraEmergency Operation CenterRescue Operations IndiaState EOCNatural Disaster ControlAapatti Sahayak AppTech Driven GovernanceFlood Prevention MeasuresSmart Disaster ResponseDevendra FadnavisAI in Disaster ManagementBreaking Governance NewsSatellite Monitoring IndiaMaharashtra Flood ManagementEmergency Response SystemBJP Government MaharashtraPublic Safety Measures
Share
Tweet
SendShare
Previous Post

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies