தமிழகத்தில் வரும் காலங்களில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாகவும் இனி தமிழக மக்கள் ராகுல்காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















