பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது - புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!
Oct 17, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது – புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.15 சதவீதம் மாணவர்களும், 96.47 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 மாணவிகளும், 4 லட்சத்து ஆயிரத்து 214 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் புதுக்கோட்டை மாவட்டம் 97.42 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

சிவகங்கை 97.54 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

97.31 சதவீதம் பெற்று திருச்சி 4ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30 சதவீதம் பெற்று 5ஆம் இடத்திலும் உள்ளது. தமிழில் 34 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆங்கிலத்தில் 94 மாணவர்களும், கணிதத்தில் 3 ஆயிரத்து 194 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அறிவியலில் 10 ஆயிரத்து 476 மாணவர்களும், சமூக அறிவியலில் 3 ஆயிரத்து 336 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

பாட வாரியான விகிதத்தில் தமிழில் 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99.44 சதவீதம் மாணவர்களும், கணிதத்தில் 97.36 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அறிவியலில் 98 சதவீத மாணவர்களும், சமூக அறிவியலில் 97.93 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.34 சதவீத மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 98.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் பள்ளியில் 96.42 சதவீதம் மாணவிகளும், ஆண்கள் பள்ளிகளில் 88.50 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: school education dept10th resultSchool Education Minister Rajmohantn exam restult
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies