திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி - அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!
Jun 21, 2026, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி – அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 07:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான வரிசை என, மூன்று வகையில் முருகனை தரிசனம் செய்யலாம். இதில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், 25 லட்சத்து, 24,100 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய கோவில் இணை கமிஷனர் ராமு, முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற ஊழியரை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர் உள்ளிட்ட பயன்படுத்தி, ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியை தவறாக பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், கோவில் பணியாளர் மேனகா, பணியில் இருந்த நேரத்தில் மட்டும் கட்டண சீட்டுகள் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அவர், 25 லட்சத்து 24,100 ரூபாய் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். தொடர்ந்து, மேனகா மே 19ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தினசரி கட்டண சீட்டு மூலம் பெறப்படும் அறிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஆய்வு செய்யாமலும், கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்க்காமலும் இருந்ததால், கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேனகா இழப்பு தொகையில், 5 லட்சம் ரூபாயை தானாக முன்வந்து தவறை ஒப்புக் கொண்டு செலுத்தியுள்ளார்.

மீதி தொகையை திருப்பி செலுத்துவதாக அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும், மேனகா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

போலீஸார், மேனகா மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Tags: lord muruganTiruchendur Murugan TempleHindu Religious and Charitable Endowments Departmentfemale employee suspend
ShareTweetSendShare
Previous Post

ரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Next Post

சென்னையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் – தவெக நிர்வாகி மீது போலீசில் புகார்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies