மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு!
Sep 6, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதலமைச்சர் விஜய் கடந்த 25ஆம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தீர்ப்பு விவரங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், டெல்லிக்கு சென்ற முதலமைச்சர், மேகதாது விவகாரத்தில் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு தடைகோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்ய இறுதி ஒப்புதல் அளித்தார்.

இதனை தொடர்ந்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சூழல் அனுமதி தரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Cauvery riverNational Green TribunalMekedatu damChief Minister Vijay
Share
Tweet
SendShare
Previous Post

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

Next Post

கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies