சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பால் காய்ச்சி குடியேறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் எடப்பாடி பழனிசாமி வசித்து வந்தார். அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக சுமார் 15 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்ததால் அந்த வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை இராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் உள்ள புதிய வீட்டில் குடியேறியுள்ளார். சுப முகூர்த்த நாள் என்பதால் காலை 6.28 மணிக்கு புதிய வீட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, பால் காய்ச்சும் நிகழ்வை முடித்து கொண்டு புதிய வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
















