78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை - சிறப்பு கட்டுரை!
Aug 5, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் அபாயகரமான தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் 78 ஆண்டுகால கனவு நிறைவேறும் நிலையில், இந்தத் திட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் நான்கரை லட்சம் சாலை விபத்துகள் பதிவாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பதிவாவதாக புள்ளிவிவரம் கவலைக்குரிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் மலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து, தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க சிறப்பு வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செவ்வனே செய்து வருகிறது.

அதிலும், அபாயகரமான வளைவுகளுடன் அடர் வனப்பகுதியின் நடுவில் உள்ள மலைப்பாதையை சீரமைத்து 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் வகையில், இத்திட்டம் 905 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 இடங்களில் 8 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரத்தில் தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

வழக்கமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒரு கிலோமீட்டர் தூர சாலை 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்படும் நிலையில், தொப்பூர் மலைப்பாதையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் தூர சாலை 137 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், மலைப்பாதையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அபாயகரமான வளைவுகள் அனைத்தும் மேம்பாலங்கள் வாயிலாக நேராக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொப்பூர் மலைப்பாதை திட்டப் பணி 41 சதவீதம் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்கிறார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசலு.

தற்போது தொப்பூர் மலைப்பாதை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், பாதுகாப்பு வசதிகளுடன் 5 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதன் சிக்கல் மிகுந்த நில அமைப்பை கருத்தில் கொண்டு, நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பூர் மலைப்பாதை மேம்படுத்தப்படுவதன் மூலம் சேலம்- தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags: Thoppur Ghat roadnhaiDharmapuri districtNational Highways Authority
ShareTweetSendShare
Previous Post

மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை – ஆளுநர் உரை

Next Post

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies