மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக இருந்த ஜெயசீலன், சுற்றுலாத்துறை இயக்குநராகவும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக பிரபுசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநராக இன்னசென்ட் திவ்யாவும், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக ஸ்ரேயா பி சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
















