சர்வதேச யோகா தினம் - பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!
Aug 7, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2026, 11:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், யோகாவை ஒரு நாளுக்கான நிகழ்வாக மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், யோகா உடல் நலம், மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் சிறந்த பயிற்சி முறை எனவும் கூறினார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 5 வயது முதல் 80 வயது வரையிலானோர் பங்கேற்று சர்வாங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர்.

சேலத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.

சேலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் மாத்ரூ சக்தி யோகா மற்றும் சேவா சபதி சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, குப்புமணி தேசிகாச்சாரி தலைமை தாங்கினார்.

இந்த விழாவிற்கு தேசிய சேவா சமிதி சேலம் தலைவர் ஹரிஹர கோபால் முன்னிலை வகித்த நிலையில், ஆர்எஸ்எஸ் ஊடகத்துறை மாநில இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் சேலம் மாநகரசை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் NCC மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர்.

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர். முன்னதாக யோகாவின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதேபோன்று மயிலாடுதுறையில், ஸ்ரீ பதஞ்சலி யோகா மையம் சார்பில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 5 வயது முதல் 80 வயது வரையிலான 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சர்வாங்காசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர்.

Tags: Coimbatore. Agricultural UniversityInternational Yoga DayLieutenant Governor KailashnathanGovernor Rajendra Vishwanath Arlekar
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Next Post

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies