ரூ.340 கோடிக்கு 'நோ' சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் உடனான நட்பை ரகசியமாக வைத்திருக்க தனக்கு 340 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாகவும், அதைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் அவரது முன்னாள் காதலி ஆஷ்லி செயிண்ட் கிளேர் கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

அமெரிக்க அரசியல் விமர்சகரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஷ்லி செயிண்ட் கிளேர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தொழிலதிபர் எலான் மஸ்க் உடனான தனது நட்பு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சை குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்…

தனக்கும் எலான் மஸ்க்கும் பிறந்த குழந்தை குறித்து வெளியே பேசக்கூடாது என்பதற்காக மிகப் பெரிய தொகை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 340 கோடி ரூபாய் வரை வழங்க எலான் மஸ்க் முன்வந்ததாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், முதலில் வீடு வாங்கவும் எதிர்கால செலவுகளுக்காகவும் 15 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தரப்பில் கூறப்பட்டதாகவும், பின்னர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் வீதம் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாகவும் ஆஷ்லி தெரிவித்துள்ளார்…

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறியுள்ள ஆஷ்லி, எலான் மஸ்க் பற்றியோ, அவரது நிறுவனங்கள் பற்றியோ எதையும் பேசக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்…

இதற்கு தன்னுடைய மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பணத்திற்காக அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறிய அவர், தேவைப்பட்டால் தன் குழந்தைகளுடன் ஒரு சிறிய அறையில் கூட வாழத் தயார் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆஷ்லியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக இருப்பதாக ஆஷ்லி செயிண்ட் கிளேர் பொதுவெளியில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே சட்டரீதியான பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது…

குழந்தை பராமரிப்பு தொகை, குழந்தையின் பாதுகாப்பு உரிமை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன…

இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆஷ்லியின் குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன…

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை சர்வதேச அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த விவகாரத்திற்கு எலான் மஸ்க் தரப்பில் பதில் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Tags: St. ClairteslaElon muskSpaceXAshley St. Clair
ShareTweetSendShare
Previous Post

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

Next Post

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies