ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!
Oct 1, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 06:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்றும், பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் எனவும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும், அரசு நலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இதில் சமரசம் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம் என்றும், தனிநபர்களின் தலையீடு இருக்காது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில், தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

Next Post

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

Related News

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies