தவெக எம்.எல்.ஏ.விடம் கட்சி மாற பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில், கரூரைச் சேர்ந்த இருவர் பேரம் பேசியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திமுக பிரமுகர்களும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுமான கார்த்திக் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரின் வீடுகளிலும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
















