முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கரூர் சென்ற ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார்.
வெண்ணெய்மலையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் விஜய், திருக்காம்புலியூர் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷா சென்றார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
பின்னர் விழா மேடையில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, முதலமைச்சருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசளித்தார்















