அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல்தான் பாட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல், தேசியக் கீதம் ஆகியவை பாடப்படுவது குறித்த புதிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு நிகழ்ச்சிகளில், முதலில் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும் என்றும். இரண்டாவதாக தேசியப் பாடல் ‘வந்தே மாதரமும், நிகழ்ச்சியின் நிறைவாக தேசியக் கீதமும் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசியப் பாடல் மற்றும் தேசியக் கீதம் இசைக்கப்படும் போது, அவற்றின் வார்த்தைகளும், வரிகளும் சரியான உச்சரிப்புடனும் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேசியப் பாடல் மற்றும் தேசியக் கீதத்தை சரியாக உச்சரிக்கும் முறை குறித்த விளக்கங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத் துறைகளும், கல்வி நிறுவனங்களும் இந்த விதிகளையும், வரிசைமுறையையும் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும்படி மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
















