ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு - சிறப்பு கட்டுரை!
Aug 5, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தலைநகர் முசாஃபராபாத்தை நோக்கிய இந்த நீண்ட பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் அணி திரண்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, கோதுமை தட்டுப்பாடு போன்றவற்றுக்கு எதிராக நீண்டகாலமாகவே நடந்து வந்த மக்கள் போராட்டம், அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் சமத்துவம் என்ற கோரிக்கைகளுடன் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகள், துப்பாக்கிச் சூடுகள், அரசின் கட்டாய கடையடைப்புகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்தன.

சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிர்த்த தியாகம் செய்துள்ள நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி சுய அரசியல் ஆதாயம் தேடும் பாகிஸ்தான் அரசின் மீது பொதுமக்களின் அதிருப்தி ஆக்ரோஷமாக மாறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் அவாமி நடவடிக்கை குழுவினர், பாகிஸ்தான் அரசுக்கு கடந்த வியாழக்கிழமை இறுதி எச்சரிக்கையாக 48 மணி நேர கெடு விதித்திருந்தனர். இந்தக் கெடு காலாவதி ஆகும் நாளில் ஜூலை 15ம் தேதி முசாஃபராபாத்தை நோக்கிய நீண்ட பேரணி நடக்கும் என்றும், அப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், சாலை மறியல்கள் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தபோதிலும் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் இந்தப் பயங்கரவாதத்துக்குப் பின்னால் பாகிஸ்தான் இராணுவமே உள்ளது என்றும், சர்வதேச ஊடகங்களே எங்களுக்கு கவரேஜ் கொடுங்கள் என்ற வாசகங்கள் பொறித்த வெள்ளை நிறக் கொடிகளை ஏந்திய படி , பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் அவாமி நடவடிக்கை குழுவினர், இது குறித்து முசாஃபராபாத் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்த படுகொலைக்குக் பொறுப்பு என்று தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் இளைஞர்களைக் கொன்றது பாகிஸ்தான் படைகள்தான் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் இளம் சகோதரர்களின் உடல்களை ஏந்திச் செல்கிறோம்… மறுபுறம் ஆட்சியாளர்கள் இதைப் புறக்கணித்து, இந்த படுகொலையை ஒரு தேர்தல் கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் ரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்ககூடாது என ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

முசாஃபராபாத் நகரைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன;

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ‘கூட்டு அவாமி செயல் குழு’வின் (JAAC) உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக நம்பகமான உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.

Tags: anti-government protestspakistan protestpakistankashmiroccupied KashmirJoint Awami Action Committee of Jammu and Kashmir
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

Next Post

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies