56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய கூட்டத்தொடர் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.
பருவமழையும், மழைக்கால கூட்டத்தொடரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறிய பிரதமர் மோடி, விக்ரம்-1 திட்டத்தின் வரலாற்று சாதனை, இந்தியர்களுக்கான மிகப்பெரிய பெருமை என தெரிவித்தார்.
விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்றும், உலகிலேயே சக்தவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், 28 வயதான இளைஞர்களின் நிறுவனம் ராக்கெட்டை செலுத்தி இந்திய விண்வெளி துறையில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல என ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.
















