அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயார்க் வந்தால் அவரை கைது செய்யும் சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அறிவித்திருப்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஐ.நா. என சர்வதேச அரசியலையே பரபரப்பாக்கியுள்ளது. இது வெறும் அரசியல் கருத்தா…? அல்லது சர்வதேச சட்டத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட மிகப்பெரிய சவாலா…? விரிவாக பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொது கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவை கைது செய்ய தனக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்பதை சட்ட ஆலோசகர்களுடன் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அவர், நெதன்யாகுவை “போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்தான்.

கடந்த 2024-ல் காசா போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பினர் நாடாக இல்லாததால், அந்த வாரண்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் இந்த விவகாரத்தில் முக்கியமான சட்ட அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஒரு நகரத்தின் மேயர்… ஒரு நாட்டின் பிரதமரை கைது செய்வது பற்றி பேசுகிறார். இதைக் கேட்கும் சாதாரண மக்களுக்கே ஒரு கேள்வி எழுகிறது…

“சர்வதேச சட்டம் பெரியதா…? அல்லது இறையாண்மைமிக்க அதிகாரமா பெரியதா…?” இந்தக் கேள்விதான் இன்று உலக அரசியலின் மையமாக மாறியுள்ளது.

போர் முடிந்தாலும், அதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் நினைவுகளும், நீதிக்கான கோரிக்கைகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே இந்த விவாதம் மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், மம்தானியின் அறிவிப்புக்கு அமெரிக்க தரப்பிலிருந்தும், இஸ்ரேல் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் ஐ.நா. தூதர் மைக் வால்ட்ஸ், இது அரசியல் நாடகம் மட்டுமே என்றும், அமெரிக்க கூட்டாட்சி சட்டங்களும், ஐ.நா. ஒப்பந்தங்களும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானனும், மம்தானி தனது நகர நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

ஒரு நகர மேயரால் மட்டும் வெளிநாட்டு அரசுத் தலைவரை கைது செய்வது நடைமுறையில் சிக்கலான விஷயம் என சர்வதேச சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க கூட்டாட்சி சட்டங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள், தூதரக பாதுகாப்பு உள்ளிட்ட பல சட்ட அம்சங்கள் இதில் குறுக்கிடக்கூடும்.

எனவே, மம்தானியின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காசா போர், சர்வதேச நீதிமன்றம், அமெரிக்க சட்டம், இஸ்ரேலின் நிலைப்பாடு என இவை அனைத்தும் சந்திக்கும் இடமாக இந்த விவகாரம் மாறியுள்ளது.

நெதன்யாகு நியூயார்க் வரும்போது என்ன நடக்கும்…? மம்தானியின் அறிவிப்பு அரசியல் செய்தியாகவே முடிவடையுமா…? அல்லது சர்வதேச சட்ட விவாதத்தை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லுமா…? உலகின் கவனம் தற்போது அந்த தருணத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

Tags: us iran war liveiran war updateNew York mayor Zohran MamdanIsraeli Prime Minister Benjamin Netanyahuiran warIran-US wariran war news
ShareTweetSendShare
Previous Post

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Next Post

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies