ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் சென்சார் தணிக்கை குழு மற்றும் படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமம் சாதி வெறி மற்றும் வன்முறை நிறைந்த பகுதியாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சின்னச்சாமி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கிராமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அளித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
\இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு, திரைப்படத்தில் “பாப்பாபட்டி” என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை என்றும், மனுதாரரின் வாதங்களை ஏற்க முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்சார் தணிக்கை குழு மற்றும் படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
















