எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ், அக்னி போன்ற ஏவுகணைகள் நாட்டின் பாதுகாப்பு அடையாளங்களாக பார்க்கப்படும் நிலையில், சப்தமே இல்லாமல் களமிறங்கி வருகிறது மற்றொரு உள்நாட்டு ஏவுகணை. எதிரியின் ராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பிரளய்’ ஏவுகணை, இந்தியாவின் புதிய தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்து வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…

இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. வான்வழி பாதுகாப்பு அமைப்பு முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைவரை பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்கி உலகை மிரள வைக்கிறது.

பாதுகாப்புத் துறையில் அக்னி மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே பெரும்பாலும் பேசப்படும் நிலையில், தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டு ‘பிரளய்’ ஏவுகணை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை, குறுகிய தூரத்தில் எதிரியின் ராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீன போர்முறைகளில் எதிரியின் கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்பு, ஆயுதக் கிடங்கு மற்றும் விமானத் தளங்கள் போன்ற முக்கிய இலக்குகளை வேகமாகவும் துல்லியமாகவும் தாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

போர் விமானங்களை நேரடியாக அனுப்பாமல், தொலைவில் இருந்தே தாக்குதல் நடத்தக்கூடிய திறனை வழங்குவதற்காகவே பிரளய் உருவாக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளில் இயங்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை, சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடிய மொபைல் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.

பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்கும் திறன்வாய்ந்தவை. ஆனால் பிரளயின் தனிச்சிறப்பு என்னவென்றால், இலக்கை நெருங்கும் இறுதிக்கட்டத்தில் கூட அதன் திசையை மாற்றும் திறன் கொண்டதாக இருப்பதுதான். இதனால் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் அதை இடைமறிப்பது மிகவும் கடினம்.

பிரளய் ஏவுகணை சுமார் 150 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. 350 முதல் 700 கிலோ எடை வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணையை, ராணுவ இலக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முடியும். இதுதான் பிரளயின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

திசையை அறியும் அதிநவீன நேவிகேஷன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவித இலக்கையும் எளிதில் அடையும் திறன் இதற்கு உள்ளது.

பிரளயின் மற்றொரு ப்ளஸ் பாய்ண்ட் அதன் இயக்கத் திறன். சாலை வழியாக வேகமாக இடமாற்றம் செய்ய முடியும் என்பதால், எதிரி நாடுகளின் ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல், இதனால் எளிமையாக தப்ப முடியும். மேலும், பழைய திரவ எரிபொருள் ஏவுகணைகளைப் போல நீண்ட நேர தயாரிப்பு தேவையில்லை.

டிஆர்டிஓ நடத்திய பல்வேறு சோதனைகளில் பிரளய் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டு ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற தொடர்ச்சியான சோதனைகளில், அதன் துல்லியமும், திசைமாற்றும் திறனும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ராணுவத்திற்காக பிரளய் ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. பிரம்மோஸ் மற்றும் பிரளய் இரண்டும் துல்லிய தாக்குதலுக்காக உருவாக்கப்பட்டாலும், அவற்றின் செயல்பாடுகளில் வேறுபாடு உள்ளது.

அதிவேக க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ், தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணையான பிரளய், எதிரியின் கட்டுப்பாட்டு மையங்கள், விமானத் தளங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை வேகமாக தாக்குவதில் அதிக பலம் கொண்டது.

இதனால் பிரம்மோஸுக்கு மாற்றாக அல்லாமல், அதற்கு துணையாக செயல்படும் ஆயுதமாக பிரளய் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் ஏவுகணை பட்டியலில் பிரளய் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

துல்லியம், வேகம், இயக்கத் திறன் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருசேரப் பெற்றுள்ள இந்த ஏவுகணை, ராணுவத்தின் வலிமைக்குப் புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது. எதிரியின் இலக்குகளை கணநேரத்தில் தாக்கும் திறனுடன், இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் ‘பிரளய்’ புதிய சகாப்தத்தை தொடங்கியிருக்கிறது.

Tags: long-range ballistic missiles‘Pralay’ missileIndia's new offensive weapon.offensive weapon.India’s missile program
ShareTweetSendShare
Previous Post

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Next Post

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies