ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விடுத்த சுற்றறிக்கையில், அனைத்து பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட வருகை நேரத்தில் வந்து வேலை நேரம் முழுவதும் பணியில் இருக்க வேண்டும் எனவும்
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர முன்அனுமதி பெறாமல் பணி நேரத்தில் கடையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றிற்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















