கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது - அமித் ஷா புகழாரம்!
Aug 9, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 9, 2026, 11:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

நாட்டின் மிக உயரிய காவல்துறை கவுரவங்களில் ஒன்றான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம் புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்திருந்தார்.

அதன்படி, புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற வண்ணக்கொடி அங்கீகார விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடிக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய மத குருமார்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரத்தை புதுச்சேரி காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

தொடர்ந்து, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா, காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாட்டு கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது எனக் கூறினார். மகரிஷி, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பங்களிப்பால் புதுச்சேரி தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம் என்பது சாதாரண விருது அல்ல என்றும், புதுச்சேரி காவல்துறையின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வீரத்துக்கு கிடைத்த உயரிய தேசிய கவுரவம் எனவும் பாராட்டினார்.

5 ஆயிரம் காவலர்கள் மட்டுமே கொண்ட புதுச்சேரி காவல்துறை சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்த காவல்துறையாக புதுச்சேரி காவல்துறை விளங்கியதாகவும், அந்த அர்ப்பணிப்பு காவல்துறையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்தது புதுச்சேரி காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை எனக் கூறினார்.

ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதற்கு காவல்துறையினர் உருவாக்கியுள்ள பாதுகாப்பான சூழலே முக்கிய காரணம் எனக்கூறிய அவர், காவல்துறையினரின் கடமை உணர்வு, தைரியம், ஒழுக்கம் மற்றும் நேர்மையான சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என புகழாரம் சூட்டினார்.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் புதுச்சேரி காவல்துறை முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், புதுச்சேரி காவல்துறையை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags: National Integration Exhibitionpuduchery cm rangasamyPuducherryhome minister amit shahamit shah speech'President's Colour award ceremonyPuducherry Director General of Police Shalini Singh.
Share
Tweet
SendShare
Previous Post

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

Next Post

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

Related News

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

Load More

அண்மைச் செய்திகள்

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies