சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அளவில் 15 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக அமைச்சர் ரமேஷும், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு அருண்ராஜ், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு விஜய் பாலாஜி
கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களுக்கு டி.கே.பிரபு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று, ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருங்கிணைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
















