அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு, ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 401 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கமிஷன் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு வர மறுத்ததால் சில இடங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகங்களின் நடவடிக்கையால், பீஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















