174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?
Oct 2, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Manikandan by Manikandan
Oct 2, 2026, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃப்ளைதுபை விமானத்தில் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழும் ஆபத்தான நிலையிலும் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்து ஒரு பெரிய அசம்பாவிதம் நடப்பதைத் தடுத்துள்ளார். 174 விமானப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் பின்னணி என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

செப்டம்பர் 30 ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவ்-க்குச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தின் முதன்மை விமானியாக கேப்டன் ஸ்மித் மச்சார் இருந்துள்ளார். திடீரென ஒமனைச் சேர்ந்த துணை விமானி மச்சாரைக் கத்தியால் குத்தி விமானத்தின் கட்டுப்பாட்டை எடுக்க முயன்றுள்ளார்.

விமானம் தடுமாறி சரிய தொடங்கிய மோசமான சூழலில் மச்சார் காக்பிட் கதவைத் திறந்து, மற்ற பயணிகளும் விமானப் பணியாளர்களும் தாக்குதல் நடத்திய துணை விமானியைப் பிடிக்க உதவியுள்ளார்.

பிறகு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். 174 பயணிகளும் வேறொரு விமானத்தின் மூலம் பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு வந்தடைந்துள்ளனர்.

அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி ஒரு பெரிய விமான ஆபத்தைத் தடுத்து நிறுத்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு விமானியாகும் ஆசையோ கனவோ சிறுவயதில் இருக்கவில்லை.

மும்பையின் வெலிங்கர் நிறுவனத்தில் மேலாண்மைப் படிப்பைத் தொடர்வதற்கு முன்பு, தனது குடும்பத் தொழிலில் சேரும் திட்டங்களுடன் ஜவுளிப் பொறியியல் துறையில் ஸ்மித் மச்சார் படித்தார்.

மேலாண்மைப் படிப்பின் போது, தனது 19வது வயதில் நடந்த ஒரு விமானப் போக்குவரத்து கருத்தரங்கில் கலந்துகொள்ள சென்றதே ஸ்மித் மச்சாரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவே அவருக்கு விமானம் ஓட்டுவதில் ஆர்வத்தை ஏற்ப்டுத்தியது.

விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற முடிவு செய்த பிறகு, நியூசிலாந்தில் மச்சார் விமானப் பயிற்சி பெற்றார். பிறகு 2011-ஜூனில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சேர்ந்தார். போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் தேர்ச்சிப் பெற்ற ஸ்மித் மச்சார் தனது விமானப்பணியில் பெங்களூரிலிருந்து டெல்லிக்கு முதல் வணிக விமானத்தை இயக்கியதாக கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு மூத்த கமாண்டராகவும் லைன் டிரெய்னிங் கேப்டனாகவும் பொறுப்பு வகித்த ஸ்மித் மச்சார், 2022-ஜூனில் ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனத்தில் நேரடி நியமன கேப்டன் பதவியில் சேர்ந்தார்.

போயிங் 737 ரக விமானங்களில் சுமார் 9,750 மணிநேர விமான அனுபவமும் 6,400 மணிநேரத்திற்கும் மேலாக விமானத்தின் முதன்மை விமானி ஆகப் பணியாற்றிய அனுபவமும் பெற்ற ஸ்மித் மச்சார் இன்று வீரமிக்க செயலுக்காக பாராட்டப் படுகிறார்.

கடுமையான காயங்கள் இருந்தபோதிலும், மச்சார் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்து, துணை விமானியை அடக்க விமான ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் உதவியுள்ளார்.

எதிர்பாராத விதமாகத் தொடங்கிய மச்சாரின் விமானப் பயணம் வாழ்க்கை, இன்று 174 பேர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

Tags: Indiafly dubaismitmachchar
Share
Tweet
SendShare
Previous Post

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Next Post

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

Related News

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies