வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் தனிநபர் வருமான வரி குறித்த பாடத்தை என்.சி.இ.ஆர்.டி. சேர்த்துள்ளது. ‘உங்கள் தனிப்பட்ட நிதியை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடத்தில், புதிய வருமான வரி விதிமுறை, வரி வரம்புகள் மற்றும் வரியை கணக்கிடும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், வரிப்பணம் நாட்டின் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்புக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதுடன், வரியை நேர்மையாக செலுத்த வேண்டியதன் அவசியமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது
















