தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி, குமாரபாளையம், பெருந்துறை, விஜயமங்கலம், செங்கப்பள்ளி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.
இதன் எதிரொலியாக, பெருந்துறை அருகே உள்ள பயணவழி உணவகத்தில் இரவு நேரத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து பயணிகளிடம் உணவின் தரம், கழிப்பறை தூய்மை குறித்து கேட்டறிந்த அவர், உணவகத்தின் சமையலறை மற்றும் விற்பனைப் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது தரமற்ற உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அமைச்சர், உணவக உரிமையாளரை எச்சரித்ததுடன், அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
















