தமிழகத்தின் புதிய வாக்காளர்களை சேர்க்க வரும் 10ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், “எஸ்ஐஆர் முடிந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை, சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
அவர்களில், தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய, அக்டோபர் 10 ல் சிறப்பு முகாம் நடக்கும் எனவும்,
வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறம் மற்றும் பெருநகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவை பயன்படுத்தப்படும் என்றும்
இதற்காக அக்டோபர் 7, 8, 9 தேதிகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
















