அதிமுக வசமிருந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெக கைப்பற்றியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 74 ஆயிரத்து 48 வாக்குகள் பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன், 54 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். இதன் மூலம் 20 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி வாகை சூடினார்.
(50X50 CARD)
கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக, இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் களமிறங்கிய கணிதா சம்பத், 47 ஆயிரத்து 450 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜானகிராமன் 2 ஆயிரத்து 709 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுகந்தி, ஆயிரத்து 986 வாக்குகள் பெற்றனர். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உட்பட 24 பேர் டெபாசிட் இழந்தனர்.
((CARD OUT))
















