தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8 ஆயிரத்து 501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்றது.
4 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8 ஆயிரத்து 501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர், திமுக வேட்பாளர் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
















