ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் உலகச் சந்தைக்கு ரஷ்யா பல லட்சம் டன் டீசல் வழங்க ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உடனடியாக 3 லட்சம் டன் டீசலும், நவம்பர் மாதத்தில் மேலும் 5 லட்சம் டன் டீசலும் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மேலும் 10 லட்சம் டன் டீசலும், ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையைப் பொறுத்து குறுகிய காலத்தில் கூடுதலாக 30 லட்சம் டன் டீசலும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் ரஷ்யாவின் எரிசக்தி விநியோக அறிவிப்பால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் டீசல் விலை வேகமாகக் குறையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையினருக்கு எரிபொருள் விலையைக் குறைப்பது முக்கிய முன்னுரிமை என்றும், ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்படாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
















