அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை இணைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
ஆதாரங்களைக் கேட்ட குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி விமர்சித்தது கண்டிக்கத்தக்கது என்றும், அரசியலமைப்பை கையில் வைத்திருப்பதால் மட்டும் அதற்கு மரியாதை செலுத்துவதாகாது என்றும் கூறினார்.
மேலும், ராகுல் காந்தி, குடியரசுத் தலைவரிடமும் 140 கோடி இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
















