அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்
Oct 11, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

Manikandan by Manikandan
Oct 11, 2026, 09:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க ராணுவத் தேவைகளுக்காக உளவு செயற்கைக்கோள்களை உருவாக்கி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு பாதுகாப்பு அனுமதி தாமதமாவது குறித்து குற்றஞ்சாட்டியிருப்பது அவரின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஸ்டார்ஷீல்ட் (Starshield) என்பது அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் ராணுவத் தேவைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வரும் ஒரு இரகசிய பாதுகாப்பு செயற்கைக்கோள் நெட்வொர்க் ஆகும்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால், பொதுமக்களுக்கான ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், இந்த ஸ்டார்ஷீல்ட் முற்றிலும் ராணுவ மற்றும் உளவுத்துறைப் பணிகளுக்காக செயல்படும் ஒரு தனி நெட்வொர்க் ஆகும்.

இந்த நெட்வொர்க் மூலம் அதிநவீன சென்சார்கள் மூலம் பூமியைத் துல்லியமாகக் கண்காணித்து, உளவுத் தகவல்களையும், தரவுகளையும் நேரடியாக ராணுவப் பிரிவுகளுக்கு அனுப்பும் என்றும் இராணுவப் பயன்பாட்டிற்காக அதிவேக, பாதுகாப்பான மற்றும் மறைமுகமான தகவல்தொடர்புகளை வழங்க முடியும் என்றும், அரசின் பிற பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பிரத்யேகக் கருவிகளை இந்த செயற்கைக்கோள் தளங்களில் பொருத்தி விண்வெளிக்கு விரைவாக அனுப்ப முடியும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை அலுவலகம் மற்றும் விண்வெளிப் படை ஆகியவற்றுடன் இணைந்து ஸ்பேஸ்எக்ஸ், இந்த ஸ்டார்ஷீல்ட் நெட்வொர்க்கை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக சுமார் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ரகசிய ஒப்பந்தம் 2021-ல் கையெழுத்தானது.

கூடுதலாக பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களையும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமே பெற்றுள்ளது.

அமெரிக்காவில், உலகின் மிகவும் கடுமையான தேசியப் பாதுகாப்பு விதிமுறைகளுக்குள் மனமுவந்து செயல்படும் எலான் மஸ்க், ஒருபோதும் அமெரிக்க மக்கள் மீது பென்டகன் ஜனநாயக உரிமைக்கு எதிராக தனது இறுக்கமான பிடியைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியதே இல்லை. மேலும் அமெரிக்க போர்த் துறை கேட்பதை, அவர்களின் விதிகளின் கீழ் எலான் மஸ்க் தொழில்நுட்பங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வழங்கி அதிக அளவில் லாபம் ஈட்டுகிறார்.

ஸ்டார்ஷீல்ட் நெட்வொர்க் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் எலான் மஸ்க், அரசால் விரும்பப்படும் ஒரு தனிப்பட்ட விநியோகஸ்தராக உள்ளார்.

அமெரிக்காவில் மதிப்புமிக்க அமெரிக்க ஒப்பந்தக்காரராக இருக்கும் எலான் மஸ்க், இந்தியாவிலோ அனுமதிக்குக் காத்திருக்கும் மூன்று போட்டியாளர்களில் ஒருவராக விண்ணப்பதாரர் வரிசையில் நிற்கிறார்.

விரோதமான தேச எல்லைகளைக் கொண்ட எந்தவொரு நாடும் கேட்பதை போலவே இந்தியாவும் தனது நாட்டு மக்களிடமிருந்து வரும் தரவுப் போக்குவரத்து, இந்தியாவிற்குள்ளேயே கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தப்படவும் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவையை இடைநிறுத்தும் செய்யவும் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்று தான் இந்தியாவும் கூறுகிறது.

இலாபகரமான ஒப்பந்தத்துடன் வரும்போது கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டை ஏற்கும் ஒரு மனிதருக்கு, காத்திருக்க நேரும்போது சாதாரண பாதுகாப்புக் கட்டுப்பாட்டை ஒரு சதி என்று அழைக்க எந்தத் தகுதியும் இல்லை என்று புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: star linkIndiacriticizeElon musk
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Related News

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies