இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கைப்பற்றிய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இடைத்தேர்தலில் அதிமுக இழந்தது. தொடர் தோல்விகள் மற்றும் இடைத்தேர்தலில் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர் தோல்வி குறித்தும் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது..
















