அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.விஜய பாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், 6 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜினாமாக்கள் தொடர்பாக சபாநாயகர் முறையாக விசாரிக்கவில்லை என வாதம் முன்வைக்கப்பட்டது.
ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது என்றும்,
உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாக கருதப்படும் எனவும் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. GFXOUT
















