பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் - சிறப்பு தொகுப்பு!
Oct 12, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 12, 2026, 08:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானைச் சிறிய மாநிலங்களாக துண்டுதுண்டாக பிரிக்க அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை நிர்வாக ரீதியாக அசிம் முனீர் கைப்பற்றும் முயற்சி என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய பிரிவினையின் விளைவாக 1947ல் உருவான பாகிஸ்தான், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் என நான்கு பெரிய மாகாணங்களாக உள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24 கோடியாகும். இதில் பாதியளவுக்கு 12.8 கோடி மக்கள் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே வசிக்கின்றனர். அதேநேரம் பாகிஸ்தானில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் தொகை வெறும் 1.50 கோடியாக உள்ளது.

நிர்வாகத்தின் மேம்பாட்டுக்காக மக்கள்தொகை அடிப்படையில் நான்கு மாகணங்களையும் 15 புதிய மாநிலங்களாகவோ, 160 சிறிய நிர்வாக பகுதிகளாகவோ பிரிக்க அசீம் முனீர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்

சொல்லப்போனால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள், பாகிஸ்தானில் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன. பஞ்சாப் மாகாணம் ஷெரீப் குடும்பத்தின் அரசியல் கோட்டையாகவும், சிந்து மாகாணம் பூட்டோ குடும்பத்தின் அரசியல் கோட்டையாகவும் கைபர் பக்துன்க்வா முன்னாள் பிரதமர் இம்ரானின் அரசியல் கோட்டையாகவும் இருந்து வருகிறது.

இந்த மாகாணங்களைப் பிரிப்பதன் மூலம், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் அதிகார ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்த முடியும் என அசிம் முனீர் கருதுவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நாட்டின் வரலாற்றில் ஐந்தில் இரண்டு பங்குக்கும் மேலாக பாகிஸ்தானில் நேரடியாக இராணுவ ஆட்சியே நடந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும்கூட பெரும்பாலும் இராணுவத்தின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டே செயல்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் அசிம் முனீரின் நாட்டைத் துண்டு துண்டாக பிரிக்கும் திட்டம் மாகாணங்களின் அதிகாரத்தை மேலும் குறைத்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப் படுகிறது.

ஒரு மாகாணத்தின் எல்லையை மாற்றுவது என்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல. பாகிஸ்தான் அரசியலமைப்பின் படி, ஒரு மாகாணத்தின் எல்லையை மாற்றும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அந்த மாகாண சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. இந்த விதியின் அடிப்படையில் மாகாணங்களை பிரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஏற்கனவே கடந்த செப்டம்பரில் அசிம் முனீரின் திட்டத்தை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள சிந்து மாகாண சட்டப்பேரவை, சிந்துவின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் அறிவித்துள்ளது.

எனவே தான் அரசியலமைப்பு நடைமுறையைத் தவிர்த்துவிட்டுத் தேசிய அளவில் வாக்கெடுப்பு நடத்தி மாகாணங்களைப் பிரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அசிம் முனீர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

மற்றொருபுறம் பலுசிஸ்தானில் பிரிவினைவாத போராட்டங்களும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பொருளாதாரப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.

இத்தகைய கொந்தளிப்பான சூழலில் மாகாணங்களின் எல்லைகளை மாற்றியமைப்பது பாகிஸ்தானின் அதிகார சமநிலையையே தலைகீழாக மாற்றக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Pakistan's Army ChiefField Marshal Asim Munir.military dictatorshipSindhKhyber PakhtunkhwapakistanpunjabBalochistanAsim Munir
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies