ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சரான தன் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அன்பில் மகேஸ் தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது,
இதனை கேட்டறிந்த நீதிபதி திமுக எப்போதிலிருந்து ஆளுநரின் அதிகாரங்கள் பற்றி பேசத் தொடங்கியது? எனவும், ஆளுநர் பதவி என்பது ‘ஆட்டுக்குத் தாடி’ போன்றது, அது தேவையில்லாதது என நீங்களே ஒப்பீடு செய்துள்ளீர்களே? எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்த நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
















