சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையே நேற்று சேவை தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில், ஐந்து மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையேயான உயா்நிலை மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடியும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி முதல் பொதுமக்களுக்கான சேவை தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். இரவு 9 மணி வரை மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















