விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காணாமல்போன 7 வயது சிறுமியை 3-வது நாளாகப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் மகள், கடந்த 11-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், மறுநாள் அதிகாலை வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிறுமியைத் தேடும் பணிக்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 3 நாட்களாகியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
















