செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அவசர கூட்டம் போல தனியார் விடுதியில் தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தவெக அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலும் பங்கேற்ற நிலையில் வி.எஸ்.பாபு, ஷாஜகான் உள்ளிட்டோர் தவிர்க்க முடியாத நிலை காரணமாக பங்கேற்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் முதலமைச்சர் வருகை தந்த நிலையில் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்த அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தனித்தனியாக சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பபடி, அவதூறு பரப்பும் செயல்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் இடம் தந்துவிடக்கூடாது என்றும், எந்த Trap-லும் மாட்டாமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
















