கல்லூரிகளில் கிறிஸ்தவ படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கிறிஸ்தவ படிப்புகளை அறிமுகப்படுத்த போவதாக வெளியாகியுள்ள செய்திகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக கூறியுள்ளார்.
சட்டமன்றத்தைப் போலவே கல்விக் கூடங்களையும் ‘சர்ச்’களாக மாற்ற அரசு முயற்சிக்கிறதா எனவும், கிறிஸ்தவ படிப்புகளை அறிமுகப்படுத்த அவசரம் காட்டுவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜோசப் விஜய் எனும் தனிநபரின் விருப்பத்திற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் வளைக்கப்படுகிறதா? என வினவியுள்ள நயினார் நாகேந்திரன், மாணவர்களிடையே மதப் பிரிவினையைத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கையும் பேராபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விக்கூடங்களை, குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கூடாரங்களாக மாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் தமிழக பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















