விஷவாயு தாக்கி உயிரிழந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! - தடுக்க தவறிய திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
Mar 22, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! – தடுக்க தவறிய திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை பாஜக மாநிலதஅண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஆவடி அருகே, பாதாளச் சாக்கடையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், தூய்மை பணியாளர்களைப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்ய வைத்ததற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம்.

ஆனால் அதன் பின்னரும், திமுக அரசு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஊழியர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால், தமிழகத்தில், நாட்டிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது உயிரிழந்துள்ள ஊழியர் குடும்பத்துக்கு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று, திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Corporation contract employee who died of poison gas! Annamalai condemned the DMK government for failing to prevent it!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிற்கு நழுவிய பதக்கங்கள்! : ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பை தவறவிட்ட வீரர்கள்

Next Post

கொலைக்கு பின் வன்கொடுமை? : பெண் மருத்துவர் வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies