கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா - சிறப்பு கட்டுரை
Sep 10, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை என்பதால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காலிஸ்தான் இயக்க தலைவர் நிஜ்ஜார் மீது தேச துரோக வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நிஜ்ஜார் உள்பட 18 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கனடா அரசை, இந்திய அரசு பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வந்தது.

ஆனால் கனடா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில்தான் நிஜ்ஜார், கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினர்.இந்தியா கடுமையாக மறுத்ததோடு,அபத்தமான குற்றச் சாட்டு என்று கூறியது.

சுமார் ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். கடந்த வாரம் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

பொய்களை மட்டுமே பேசி வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மக்கள் செல்வாக்கு 15 சதவீதத்துக்கும் கீழே சரிந்துள்ளது. மேலும், லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவை நீக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, சீனாவின் உதவியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சூழலில், கனடாவுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளுடனான ஜஸ்டின் ட்ரூடோவின் சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையான பியரே, கனடாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே கனடா காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்தியாவில் தேடப் பட்ட காலிஸ்தான் தீவிரவாதி தல்விந்தர் சிங் பர்மாவை ஒப்படைக்கும் படி இந்திய அரசு கனடாவிடம் கூறியது. அப்போது கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையான பியரே அதற்கு செவிசாய்க்கவில்லை.

இந்திய விமானங்கள் நடுவானில் வெடித்து சிதறும் என்று எச்சரித்த காலிஸ்தான் தீவிரவாதி தல்விந்தர் சிங் பர்மா சொன்னது போலவே, 1985ம் ஆண்டு கனிஷ்கா ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 329 பேரில் 268 பேர் கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத் தக்கது.

கனிஷ்கா குண்டு வெடிப்பு, 9/11 க்கு முன் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதலாகும். இதை மறந்து விட்டு, இன்று அமெரிக்கா, தீவிரவாதிகளுக்கு துணை நிற்கும் கனடாவை நம்புகிறது.

தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதோடு, இந்தியாவுக்கு பகிரங்க சவால் விடுகிறார். மேலும் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பல ஆண்டுகளாக நேரடி தொடர்பில் இருப்பதாகவும், பன்னூன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஐந்து கண்கள் அமைப்பின் மற்ற உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்தை இந்தியாவுக்கு எதிராக திருப்பி, தான் ஆதாயம் அடையலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ கணக்கு போடுகிறார். இதற்கு, அமெரிக்க வெளியுறவுத் துறையும்,அந்நாட்டின் பாரம்பரிய இந்திய-எதிர்ப்பு கருத்துருவாக்கமும் ஜஸ்டின் ட்ரூடோ சாதகமாக உள்ளன.

சீனா உடனான கடுமையான போட்டி மற்றும் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவுடனான நட்பை காப்பாற்ற வேண்டிய நிலைமை என அமெரிக்கா தத்தளிக்கிறது. இந்நிலையில், வெள்ளை மனிதனின் சுமையை ஏற்றுக்கொள்வதில் இருந்து, வெள்ளை மனிதன் ஒரு சுமை என்பதை ஒப்புக்கொள்வதற்கு அமெரிக்கா மாறவேண்டும். அல்லது காலம் அமெரிக்காவை மாற்றும்.

Tags: americaCanadaCanada's Prime Minister Justin TrudeauKhalistan terroristsNijjarIndia
Share
Tweet
SendShare
Previous Post

ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை!

Next Post

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies