ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்க 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான காசோலையை தலைமை செயலாளரிடம் வழங்கினார்.