விரைவில் போர் முடியும் - ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவில் போர் முடியும் – ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்கிறது. ஈரான் மீதான போரின் நோக்கம் என்ன என்பது குறித்து மாறி மாறி விளக்கங்களை வழங்கி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க இராணுவத்தின் வெற்றியைப் பற்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா களமிறங்கி இருக்காவிட்டால் ஈரான், இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியிருக்கும் என்று தெரிவித்த ட்ரம்ப், மேலும் ஈரானின் 80 சதவீத ஏவுகணை ஏவுதளங்கள்,ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்து விட்டதாக கூறியுள்ளார்.

விமானப்படை, கடற்படை என ஈரானில் உள்ள ஒவ்வொரு படையையும் முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட அந்நாட்டுக் கடற்படைக் கப்பல்களை அழித்ததாகவும், விமானப்படை மற்றும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல வழிகளில் வெற்றி பெற்றாலும், இன்னும் போதுமான அளவு வெற்றி பெறவில்லை என்று விவரித்த ட்ரம்ப், நீண்டகால ஆபத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் இறுதி வெற்றியை அடைய முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நோக்கத்தை முழுமையாக அடைவதில் அமெரிக்கா பெரிய முன்னேற்றங்களை அடைந்து வருவதாக கூறிய ட்ரம்ப், தலைமை இல்லாத ஈரான், ஹார்மோஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், இதுவரை தாக்கியதை விட 20 மடங்கு அதிகமாக ஈரானை தாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை ஈரான் 100 சதவீதம் தாக்க தயாராக இருப்பதாகவும், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன என்றும், விரைவில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் முழுவதையும் ஈரான் தாக்குவார்கள் என்று கூறிய ட்ரம்ப், அதற்கு முன் ஈரானின் ட்ரோன்கள் உற்பத்தி ஆலைகளை அழித்துவிட்டால் மிகவும் பாதுகாப்பான இடமாக உலகம் மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு எதிராக நீண்ட காலத்துக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் ஈரானுக்கு இனி இல்லாதபோது போர் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த திட்டங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

போர் விரைவில் முடியும் என்ற ட்ரம்பின் அறிவிப்புக்கு, போரின் முடிவை தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படை அறிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் சமன்பாடுகள் மற்றும் எதிர்கால நிலை தங்கள் கைகளில் இருப்பதாகவும் அதனால் அமெரிக்காவால் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் IRGC தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க ஜி 7 நாடுகள் தயாராக இருப்பதாக கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஹார்மோஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான தற்காப்பு பணியில் பிரான்சும் மற்ற ஜி-7 நாடுகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

Tags: AYATOLLAH ALI KHAMENEIiran us bases attackiran attacksayatollah ali khamenei deadiran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackiran war will end sooniran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us bases
Share
Tweet
SendShare
Previous Post

திருவாரூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் – விவசாயிகள் வேதனை!

Next Post

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய பெயர் பெற்ற கட்சி திமுக – பிரதமர் மோடி விமர்சனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies