கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!
Aug 16, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் மான்களை வேட்டையாட சென்றதாகக் கூறி தமிழர்கள் மூன்று பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து ஹனூர் வனச்சரக அலுவலகம் சூறையாடப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 4 பேரை துரத்திப் பிடிக்க முயன்ற வனத்துறையினர், அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் தப்பியோடியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஹனூர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்​களும், கிராம
மக்​களும், கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார்பாளையம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கத்தை முற்றுகையிட்டதோடு, அங்குள்ள பொருட்களையும் சூறையாடினர்.

துப்பாக்கிச்சூடு நடத்த வனத்துறைக்கு யார் உரிமை கொடுத்தது என்று முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வனச்சரக அலுவலகம் அருகே சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மைசூர் கே.ஆர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.

இதனிடையே 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: HanurChamarajanagarHanur forest officialsKarnataka Forest Departmentthree Tamil died in shootingCauvery Wildlife Sanctuary
Share
Tweet
SendShare
Previous Post

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Next Post

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

Related News

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies